தமிழகத்தில் இன்று 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு..! உயிரிழந்தோர் 99 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,879பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 99 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விறுவிறுவென உயர்ந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக 6 ஆயிரத்திற்கும் கீழாக பதிவாகி வருகிறது. இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று தமிழகத்தில் 5879 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 2,51,738 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் சிகிச்சை முடிந்து குணமானவர்களின் எண்ணிக்கை 7,010 ஆகும்.

https://play.google.com/store/apps/details?id=kuttram.kuttrame
இது வரை குணமானவர்களின் எண்ணிக்கை 1,90,966 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒரே நாளில் 99 பேர் பலியாகி உள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்தை கடந்து 4,034 ஆக உயர்ந்து உள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,074பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சென்னையில் மட்டும் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்து 1,00,877 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னைக்கு அடுத்து காஞ்சிபுரம் 368, தேனி 3 27, திருவள்ளுர் 305 , செங்கல்பட்டு 314 என மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதார துறை தெரிவித்துள்ளது.






