--- --:--:-- --

கொரொனா நோயாளி ஆம்புலன்சிலேயே இறந்ததால் உறவினர்கள் ஆத்திரம்..!

5

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் ஆம்புலன்சிலேயே இறக்க நேரிட்டதால் அவரது உறவினர்கள் ஓட்டுநரை சரமாரியாக தாக்கிய சம்பவம் நிகழ்ந்தது.நிம்மையாலையா பகுதியை சேர்ந்த 75 வயது முதியவர் ராமையா மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் தனியார் ஆம்புலன்ஸ் வரவழைத்துள்ளனர்.

 

முதியவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு படுக்கை வசதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு மீண்டும் ஆம்புலன்சில் வைத்த போது அவர் உயிர் பிரிந்தது.

 

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் ஆம்புலன்சில் ஏன் ஆக்ஸிஜன் உபகரணங்கள் வைக்கப்படவில்லை எனக்கூறி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஒரு கட்டத்தில் அவர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வாகனத்திலிருந்து கீழே இறக்கி கடுமையாக தாக்கினார். கொரோனாவால் மக்களிடையே மனிதாபிமானம் குறைந்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon