திருப்பூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவன் கைது..!
A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING
திருப்பூரில் 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். அமராவதி பாளையம் பகுதியில் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.
அருகே உள்ள மளிகை கடையில் வேலை செய்யும் 14 வயது சிறுவனை மிரட்டி பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை போக்சோ பிரிவின் கீழ் கைது செய்து கோவையில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.






