சூதாட்டம் விளையாடி மாட்டிக்கொண்ட நடிகர் ஷியாம்..!
சென்னை நுங்கம்பாக்கத்தில் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டதாக திரைப்பட நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேரை போலீசார் பிடித்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு நேரத்தில் நடக்கும் சூதாட்டத்தில் திரைப்பட நடிகர் மற்றும் நடிகைகள் பங்கு பெற இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 13 பேரை போலீசார் அழைத்து சென்றுள்ளனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.







