--- --:--:-- --

தேனியில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம், குழந்தை கடத்தல்..!

6

தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும் கடந்த மாதம் மட்டும் 27 குழந்தை திருமணங்கள் நடந்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. குழந்தை திருமணம், கூலித் தொழிலுக்காக குழந்தைகளை கடத்துவது என குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாவட்டமாக தேனி மாறிவிடுகிறது.

 

கடந்த 2ஆம் தேதி தேனி அருகே கோட்டையை சேர்ந்த 32 வயதான ராஜபாண்டியன் என்பவருக்கு அரண்மனை புதூரை சேர்ந்த 14 வயது பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. அதே நாளில் தோப்புபட்டியில் ஒரு சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

 

கடந்த ஆண்டு மட்டும் 120 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. கொரொனாவால் ஊரடங்கு அமலாகி இருக்கும் நிலையிலும் கடந்த மாதம் மட்டும் தேனியில் 27 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. போக்சோ மற்றும் ஆட்கடத்தல் பிரிவுகளின் கீழ் 32 வழக்குகள் பதிவாகியுள்ளன.

 

வெளிமாநிலங்களில் குழந்தை தொழிலாளர்களாக அனுப்புவதற்காக சிறுவர்களை கடத்தும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த ஆறு குழந்தைகள் கடந்த மாதம் மீட்கப்பட்டுள்ளன. போதிய விழிப்புணர்வுடன் நல்ல கல்வி வேலை வாய்ப்பு இருந்தால் தான் இது போன்ற குற்றங்கள் குறையும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon