தமிழக முதல்வரிடம் தொலைபேசியில் கொரொனா தடுப்பு நடவடிக்கை குறித்து பேசிய பிரதமர்..!
பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு தமிழகத்தில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் முதலமைச்சரை பிரதமர் தொலைபேசியில் அழைத்து கொரொனா வைரஸ் பணிகள் மற்றும் மருத்துவ சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்ட இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் நாளொன்றுக்கு 48 ஆயிரம் பேருக்குக் கொரொனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமரிடம் முதல்வர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கொரொனா பரவலை தடுக்க தமிழக அரசு முழுவீச்சில் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் விரைவில் தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாகவும் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.






