--- --:--:-- --

சாத்தான்குளம் சிறுமி கொலை கொலையாளி பரபரப்பு வாக்குமூலம்

0.1

தூத்துக்குடி மாவட்டம் சாந்தான்குளம் அருகே வடலிவிளை இசைக்கியம்மன் கோவில் அருகே நேற்றைய முன்தினம் சிறுமி உடலில் காயங்களுடன் தண்ணீர் டிரம்மில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார்.

 

அங்கே கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்த வாலிபர்கள் சொன்ன தகவலின் பெயரில் பக்கத்து வீட்டு வல்லவன் மகன் முத்திஸ்வரன் மற்றும் சுயம்பு மகன் நித்திஷ் ஆகியோர் விசாரணையின் பெயரில் கைது செய்யப்பட்டு நாசரேத் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.விசாரணையில் நான் தான் கொலை செய்தேன் என பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

 

ஆம் எனது பெயர் முத்திஸ்வரன் எனது தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் நான் மிகவும் போதைக்கு அடிமையானவன் தினமும் கஞ்சா புகை பழக்கமும் உண்டு..இதனால் எனது தந்தை என்னை திட்டி அடிப்பதுண்டு அதேபோல் அன்றும் என்னை அடித்தார்.. அந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு சிறுமி முத்தார் எங்கள் வீட்டிற்கு வந்தாள்.

 

டிவி பார்க்கவேண்டும் டிவி போடுங்கள் என சொன்னால் முடியாது போ என சொன்னேன். அவள் திரும்பவும் டிவி போடுங்கள் என அடம்பிடித்தால் நான் முடியாது என திட்டி விட்டே. உடனே கீழே கிடந்த கல்லை எடுத்து என் மீது எரிந்தால் நான் கோபத்தில் கழுத்தை பிடித்து நெரித்தேன் அதில் அந்த இடத்திலே அவர் உயிரிழந்தால் பின் எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் என் நண்பன் நித்திஷிடம் கூறினேன்.

 

பின்னர் நாங்கள் வீட்டில் இருந்த ட்ரம்மில் போட்டு டுவீலரில் கொண்டு இசைக்கியம்மன் கோவில் பாலத்துக்கு அடியில் கீழே எறிந்து விட்டு சென்றோம்.. ஆனால் நான் சிறுமியை பாலியல் பலாத்காரம் எதுவும் செய்யவில்லை இவ்வாறு அவர் வாக்குமூலம் கூறியுள்ளார்.இதற்கிடையில் பிரேதபரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்றே வந்துள்ளது. என போலீசார் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon