குப்பை கொட்டும் தகராறில் துப்பாக்கியை எடுத்து சுட்ட நபர்..!
சென்னை போரூர் அருகே குப்பை கொட்டுவதில் ஏற்பட்ட தகராறில் பலூன் பயன்படுத்தப்படும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். குடியிருப்பில் உள்ள சாந்தி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த நாகேந்திரன் ஆன்லைன் மூலம் வாங்கி வைத்திருந்த பலூன் சுட பயன்படுத்தப்படும் ரப்பர் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியால் வானத்தை நோக்கி நான்கு முறை சுட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.






