வரதட்சணை கொடுமையால் தனது தாயிடம் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்..!
கடலூரில் வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறப்பதற்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து உருக்கமாக பேசிய வீடியோ பரவி வருகிறது. விருத்தாச்சலத்தில் ஷோபனா என்பவர் மாமனார் மாமியார் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் தற்கொலைக்கு முன் அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றியும் குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளும்படியும் உருக்கமாகப் பேசி வீடியோவாக பதிவு செய்து தனது தாயாருக்கு அனுப்பியுள்ளார். அதில் தனது மாமனார் மற்றும் மாமியார் பலமுறை தாக்கியதாகவும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் ஆனால் கணவன் தனக்கு ஆதரவாகவும் இல்லை.
அவரது பெற்றோர்களின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார். வரதட்சணையாக கேட்டு கடுமையாக தாக்கியதாக ஷோபனா கழுத்தில் துணியை மாற்றும் வீடியோ காண்போர் மனதை உருக்கும் விதமாக உள்ளது.






