--- --:--:-- --

இந்தியாவில் ஒரே நாளில் 32,695 ஆக எகிறிய கொரோனா பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது

68

இந்தியாவில் ஒரு நாளில் கொரோனா பாதிப்பு முதல் தடவையாக 30 ஆயிரத்தை கடந்து நேற்று 32,695 பேருக்கு தொற்று என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதுவரையிலான மொத்த எண்ணிக்கையும் 10 லட்சத்தை எட்டவுள்ளது.

 

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.உலக நாடுகளில் இதுவரை ஒரு கோடியே 36 லட்சத்து 99 ஆயிரத்து 621 பேர் பாதிப்புக்கு ஆளாகி, 5 லட்சத்து 86 ஆயிரத்து 974 ஆக உயிரிழப்பு உயர்ந்துள்ளது. பாதிப்பிலும் ( 36,17,040) உயிரிழப்பிலும் (1,40,150) அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில், உள்ளது.மற்றொரு வட அமெரிக்க நாடான பிரேசிலில் லேட்டாக பாதிப்பு தொடங்கினாலும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் அமெரிக்காவின் பாதிப்பில் பாதியளவுக்கு உயர்ந்து உள்ளது. பிரேசிலில் பாதிப்பு19,70,909 ஆகவும், உயிரிழப்பு 75,523 ஆகவும் உயர்ந்து 2-வது இடத்தில் உள்ளது.


அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக மொத்த கொரோனா தொற்று பாதிப்பில் இந்தியா 3-வது இடத்தில் தொடர்கிறது .ஆனால் உயிர் இழப்பில் மற்ற நாடுகளைப் போல் மோசமான பாதிப்பு இந்தியாவில் இல்லை என்றே கூறினாலும் சமீப நாட்களாக தொற்று பரவல் படிப்படியாக வேகமெடுத்துள்ளது.


கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கு கீழாக இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை, நேற்று முதல் தடவையாக 30 ஆயிரத்தை கடந்து 32,695 ஆக பதிவானது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,68,876 ஆன நிலையில் 10 லட்சத்தை நெருங்கியுள்ளது. இதேபோல் நேற்று உயிரிழப்பும் உச்ச கட்டமாக 606 ஆக பதிவாகி மொத்த பலி எண்ணிக்கை
24,915 ஆக உயர்ந்துள்ளது

 

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது தான் ஆறுதலான விஷயமாகும். நேற்று ஒரே நாளில் 20,783 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 6,12,814 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்னும் 3,31,146 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon