--- --:--:-- --

கொரொனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்கிற்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு..!

14

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கொரொனா பாதிப்புகளால் உயிரிழந்தோரின் இறுதி சடங்கிற்கு 15,000 ரூபாய் வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆந்திராவில் கொரோனா பாதிப்பு களின் எண்ணிக்கையும் உயர்ந்து வரும் நிலையில் இது பற்றிய மறு ஆய்வுக் கூட்டம் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடந்தது.

 

கூட்டத்தில் கொரொனா பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்வதற்கு பதினைந்தாயிரம் ரூபாய் வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவை உடனடியாக அமல்படுத்தும் படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆந்திராவில் கொரொனா வைரசுக்கு இதுவரை 365 பேர் உயிரிழந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon