--- --:--:-- --

தமிழகத்தில் ஜூலை 31ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் ரத்து..!

11.1

இம்மாதம் 15ஆம் தேதி வரை தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

திருச்சி – செங்கல்பட்டு, மதுரை – விழுப்புரம், கோவை- காட்பாடி, அரக்கோணம் – கோவை, கோவை – மயிலாடுதுறை, திருச்சி – நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களில் ரத்தான காலத்திற்கு முன் பதிவு செய்தவர்களுக்கு 100 சதவீத டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும். ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்தவர்களுக்கு தானாகவே வங்கி கணக்கில் பணம் வந்து சேரும்.

 

முன்பதிவு மையங்களில் வாங்கப்பட்ட டிக்கெட்டுகளை 6 மாதங்களுக்குள் திருப்பிக் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம். அதே நேரம் அடுத்த அறிவிப்பு வரும் வரை சென்னை சென்ட்ரல் நியூடெல்லி ராஜ்தானி விரைவுவண்டி வழக்கம்போல இயக்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon