ஓட்டுநர் இல்லாமல் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான கார்..!
ரஷ்யாவில் ஓட்டுனரின் கவனக் குறைவால் தானாக இயங்கிய கார் அசாதாரணமான விபத்தை ஏற்படுத்திய வீடியோ வெளியாகியுள்ளது. லியோனேகான் என்ற இடத்தில் மழை சரிவில் சுற்றுலா பயணிகள் பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஓட்டுநர் தனது காரை இயக்கி ஏற முயன்ற போது வழுக்கி கீழே விழுந்தார். இயக்கப்பட்ட வேகத்தில் வந்த கார் அவர் மீது ஏறி இறங்கியது.
பின்னர் கட்டுப்பாட்டை இழந்த கார் மலைச்சரிவில் வேகமாக கீழே இறங்கியது. அதனைக் கண்ட ஒரு சிலர் விலகிக்கொள்ள இருவர் மீது மோதி பின்னர் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த நிகழ்வில் மூன்று பேர் காயமடைந்தனர்.







