--- --:--:-- --

கொரில்லாவுக்குள் ஏற்பட்ட சண்டை….அதில் ஒரு கொரில்லாவுக்கு கொரொனா தொற்று..!

5

அமெரிக்காவில் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த கொரில்லாவுக்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது. மியாமி விலங்கியல் பூங்காவில் சாங்கோ என்ற 36 வயதுள்ள கொரில்லா உட்பட ஏராளமான உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அதன் சகோதரனுடன் சண்டையிட்டதால் காயமடைந்து காய்ச்சல் ஏற்பட்டது.

 

இதன் காரணமாக சாங்கோ கொரில்லாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் தொடர்ந்து இருப்பதால் அந்த கொரில்லாவிற்கு கொரொனா சோதனை செய்யப்பட்டது. ஒரு வேளை தொற்று இருக்குமானால் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு குறைவு என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon