திருப்பூரில் தொடரும் கள்ளத்தனமான மது விற்பனை….புதிய போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் முற்றுப்புள்ளி வைப்பாரா?
அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது .
அதன்படிமெடிக்கல் மற்றும் பால் பொருட்கள் கடைகள் மட்டும் திறக்க வேண்டும். மற்ற கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் உட்பட அனைத்தும் முழுமையாக மூடப்பட வேண்டும்.
இதில் டாலர் சிட்டி தொழில் நகரான திருப்பூர் கடந்த வாரம் முதல் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனையை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவர திருப்பூரில் நாளை
கொரோனா பரவலை தடுக்க
முழு ஊரடங்கை முழமையாக கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அப்படி செய்தால் மட்டுமே ஏற்றுமதி புகழ்பெற்ற திருப்பூர் மறுபடியும் பழைய நிலையை எட்ட முடியும் .இல்லை என்றால் சென்னை மதுரையை போல் மிகவும் அதிக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு தொழில் நிறுவனங்கள் நடத்த முடியாத நிலையை எட்டும்.

இந்த முயற்சிக்கு சவால் விடும் விதமாக டாஸ்மாக் பார் உரிமையாளர்கள்
கள்ளத்தனமாக டாஸ்மாக் பாரில் மது விற்பனையை ஜோராக கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை நடத்திக் காட்டினார்கள்.
மெடிக்கல் , பால் பொருட்கள் கடைகள் தவிர அனைத்து கடைகள் , பெட்ரோல் பங்க் அனைத்தும் மூடப்பட்டு இருந்தும். போலீஸ்காரர்கள் பல்வேறு பகுதிகளில் தற்காலிக சோதனை சாவடி மற்றும் ரோந்துகள் பணிகள் மூலம் கண்காணிப்பு செய்து தேவையின்றி வெளியில் சுற்றும் நபர்களை எச்சரித்து அனுப்பினர்.
“ஆனால் கள்ளத்தனமாக அனைத்து டாஸ்மாக் பாரிலும் கட்டிங் சரக்கு, தண்ணீர், டம்ளர், ஸ்னாக்ஸ் தாராளமாக பலமடங்கு கூடுதலான விலை வைத்து விற்பனை நடைபெற்றது. இதனால் குடிமகன்கள் அட்டூழியம் ஆங்காங்கே நடைபெற்றது.பல குடும்ப பெண்கள் வைத்திருந்த அத்தியாவசிய தேவைக்கான பணம் அனைத்தும் இந்த கள்ளத்தனமாக விற்பனை செய்த பார் க்கு சென்றது என்பது வருத்தமான உண்மை .”
தற்போது புதிதாக பதவியேற்றுள்ள திருப்பூர் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்து நாளை நடக்கவுள்ள முழு ஊரடங்கு உத்தரவை முழுமை பெற செய்ய வேண்டுமென்பது பொது மக்களின் விருப்பம் ஆகும்.
மேலும் மது விலக்கு போலீஸார் ரோந்து சென்று கள்ளத்தனமாக செயல்படும் பார்களை ஆய்வு செய்து அதிக அளவில் மது விற்பனை நடைபெறுவதால் இதில் போலி சரக்குகள் இருக்கிறதா? என்று சோதனை செய்தால் பல உண்மைகள் வெளிவரும்.







