--- --:--:-- --

என்னை பார்த்து காப்பி அடிக்காதீங்க என்று திரிஷாவை கூறும் மீரா..! கடுப்பான திரிஷா ரசிகர்கள்..!

7

மாடல் அழகியும் நடிகையுமான மீராமிதுன். நடிகை த்ரிஷாவை எச்சரித்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வொர்கவுட் செல்பீ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

 

அதில் களங்கமற்ற மனதில் நித்திய சூரிய ஒளி என குறிப்பிட்டிருந்தார். மீராமிதுன் திரிஷாவின் இந்த செல்பியை தனது மாடலிங் புகைப்படத்தையும் பதிவிட்டு திரிஷா தன்னை போலவே காப்பி அடிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் உங்களுக்கென ஒரு வாழ்க்கையை பெறுங்கள் என கூறியுள்ள மீராமிதுன் தன்னை போல தோற்றமளிக்கும் போட்டோஷாப் செய்த தங்களின் போட்டோவை பதிவிட்டால் கடுமையான குற்றச்சாட்டுக்கு ஆளாவீர்கள் என்றும் இது தான் கடைசி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon