போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு திருநங்கை தற்கொலை..!
சென்னையில் ஊரடங்கை மீறியதாக வாகனத்தை பறிமுதல் செய்ததற்கு போலீசாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து திருநங்கை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .கோடம்பாக்கம் காமராஜர் காலனியை சேர்ந்த திருநங்கை பாலியல் தொழிலில் ஈடுபட வள்ளுவர் கோட்டம் வந்ததாகவும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவரது வாகனத்தை பறிமுதல் செய்ததாக போலீசார் கூறியுள்ளனர்.
இதனால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சபினா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்றும் இருசக்கர வாகனத்தை திரும்ப கேட்டு தகராறு செய்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தனது வீட்டு மாடிப் படிக்கட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்றும் திருநங்கையின் வளையல் உள்ளிட்டவற்றை உடைத்து போலீசார் மிரட்டியதாக அவரது சக திருநங்கைகள் குற்றம்சாட்டியுள்ளனர் .
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திருநங்கைகள் சிலர் கோடம்பாக்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.






