கரடி அருகே சென்ற பெண்… தாக்க முயன்ற கரடி..!
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் தன்னை சீண்டிய இளம்பெண்ணை கரடி விரட்டியத்தது .பக்கோ நேர இடத்திலுள்ள வனப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் பழுப்பு கரடி ஒன்று நின்று கொண்டிருந்தது. வாகன ஓட்டிகள் அதனை தங்கள் செல்போனில் படம் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் மிக அருகில் சென்றார்.
இதனால் எரிச்சலுற்ற கரடி அந்த பெண்ணை நோக்கி ஒரு எச்சரிக்கை தாவலை நடத்தியது. இதனால் அச்சம் அடைந்த அந்த பெண் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதனை மற்றொரு காரில் இருந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.







