--- --:--:-- --

உயிரிழப்புகளை கட்டுக்குள் கொண்டு வராததால் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் நிறுத்தம்!

7

உயிரிழப்புகள் குறையாத நிலையில் மருத்துவமனைகளில் இருக்கும் கொரொனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மருந்து தருவதை நிறுத்தி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

 

கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மற்றும் எச்ஐவி தொற்றுக்கு வழங்கப்படும் மருந்துகள் வழங்கப்பட்டு வந்தன.

 

இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஹைட்ராக்ஸிக்கிலோராக்குவின் மற்றும் எச்‌ஐ‌வி மருந்துகள் கொரொனா நோயாளிகளின் உயிரிழப்புகளை குறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

 

இதனால் இந்த மருந்துகளை நோயாளிகளுக்கு தருவதை நிறுத்தி உள்ளதாகவும் கூறுகின்றது. எனினும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படாத கொரொனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகள் தரப்படுவது நிறுத்தப்படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon