திரிணாமூல் காங்கிரஸ் பெண் கவுன்சிலர் மீது துப்பாக்கிச் சூடு..!
கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் அவருடைய அரசியல் எதிரிகளால் சுடப்பட்டார். வடக்கு பராக்பூர் பகுதியில் ஜம்பாதாஸ் என்ற பெண் கவுன்சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவரது காலில் குண்டுகள் பாய்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.







