--- --:--:-- --

நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக மர்ம நபர் மிரட்டல்..!

1

நடிகர் விஜய் வீட்டிற்கு நள்ளிரவில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட அந்த நபர் நடிகர் விஜயின் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வெடிகுண்டு வைக்கப் போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து தாக கூறப்படுகிறது.

 

இதனடிப்படையில் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் வெடிகுண்டு வைக்கப் போவதாக வந்த தகவல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபரை தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மேலும் நடிகர் விஜய் தற்போது வசித்துவரும் நீலாங்கரை வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon