தமிழகத்தில் 3-வது நாளாக 4 ஆயிரத்தை தாண்டி 4280 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இன்றும் 65 பேர் உயிரிழப்பு!!
தமிழகத்தில் 3-வது நாளாக இன்றும் 4 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்று 4,280 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் உயிரிழப்பும் 65 ஆக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கையும் ஒரு லட்சத்தை கடந்து பீதியை கிளப்பி வருகிறது . அதிலும் கடந்த 3 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. இன்றும் 4280 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,07, 001 ஆக அதிகரித்துள்ளது.
இதில் சென்னையில் 1,842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையை விட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பதிவான எண்ணிக்கை இன்றும் அதிகமாகி உள்ளது.
“சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் இன்றும் 352 பேருக்கு பாதிப்பு உ றுதியாகி புதிய உச்சத்தை எட்டி வருகிறது . திருவள்ளூரில் 251 , செங்கல்பட்டில் 215, திருவண்ணாமலை 171, ராமநாதபுரம் 149, காஞ்சிபுரம் 131, விருதுநகர் 100 என பாதிப்பு பதிவாகியுள்ளது”
தமிழகத்தில் இன்று 2,214 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் இன்று கொரோனாவால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையும் 1450 ஆக அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள பட்டியலில் தகவல் வெளியாகியுள்ளது.







