கொரொனா வைரஸ் வடிவம் மாறுகிறதா? ஆய்வில் வெளிவந்த தகவல் என்ன?
கொரோனா வைரசின் புதிய வடிவம் ஐரோப்பியாவில் இருந்து அமெரிக்கா வரை வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஆய்வில் தெரியவந்துள்ளது. பழைய வைரசால் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் மூலமாகவே சக மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதிய வடிவம் பெற்ற கொரொனாவை தடுப்பு மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியுமா என்ற ஆய்வு தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய வடிவ கொரோனா வைரஸ் மேல் சுவாச பகுதி, மூக்கு, தொண்டை ஆகிய பகுதிகளில் அதிவேகமாக பரவி வருவதாகவும் அதற்கான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.







