செவ்வாய்கிரகத்தின் நிலவு…படம் பிடித்த இஸ்ரோ..!
செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய நிலவான போபோஸை இஸ்ரோ படம் பிடித்து சாதனை படைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட மங்கள்யான் விண்கலத்தில் உள்ள எம்சிசி எனப்படும் கேமரா மூலம் இந்த நிலவு படம்பிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றாம் தேதி எடுக்கப்பட்ட போபோஸை படம் செவ்வாயிலிருந்து 7 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும், போபோஸைலிருந்து 4 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் எடுக்கப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த நிலவு கார்பநேசியஸ் சான்றஸ் எனப்படும் விண் கற்களால் ஆனவை என்றும் தற்போது எடுக்கப்பட்ட படத்தில் போபோசின் மிகப்பெரிய பள்ளங்களான சக்லோஸ்கி ரோச் மற்றும் கிரில்ட்ரிக் பள்ளங்களுடன் ஷிடிக்னி என்ற மற்றொரு பெரிய பள்ளமும் பதிவாகியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.







