--- --:--:-- --

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் 28 புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம்..!

9

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் 28 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அம்மாநிலத்தில் ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகியதால் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் கடந்த மார்ச் மாதம் முதலமைச்சராக பதவியேற்றார்.

 

தொடர்ந்து 5 அமைச்சர்கள் மட்டும் பதவியேற்ற நிலையில் நேற்று 28 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் ஜோதிராதித்ய சிந்தியா 12 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் அடுத்த ஆறு மாதத்திற்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் பதவியை தக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Right Menu Icon