பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் உயிரிழப்பு..! திரையுலக பிரபலங்கள் இரங்கல்.!
பாலிவுட் நடன இயக்குனர் சரோஜ் கான் மாரடைப்பால் இன்று உயிரிழந்தார். ஹிந்தியில் சுமார் 40 ஆண்டுகளாக டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தவர் சரோஜ் கான். அவருக்கு கடந்த மாதம் 20ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இவருக்கு கொரொனா என தகவல் பரவியதையடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் பரிசோதனையில் அவருக்கு கொரொனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 20 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரோஜ் கான் இன்று அதிகாலை 2.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவரின் மரணத்தை கேட்ட பாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் கவலை அடைந்துள்ளனர்.
71 வயதில் அவர் உயிரிழந்துள்ளார். சரோஜ் கான் பாலிவுட்டின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். சிறந்த நடனத்திற்கான தேசிய விருதை மூன்று முறை பெற்றுள்ளார். ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித் போன்ற முன்னணி கதாநாயகர்களுக்கு வெற்றியாக இருந்தவர் இவர் என்று கூறியுள்ளனர்.
திரையுலக பிரபலங்கள், சரோஜ் கானுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.






