சாத்தான்குளம் சம்வத்தை நினைத்தாலே ஈரக்குலை நடுங்குகிறது எனக்கூறியுள்ள எஸ்.ஏ.சந்திரசேகர்..!
சாத்தான்குளம் சம்பவமான தந்தை, மகன் உயிரிழப்பு என்பது தமிழ் நாட்டையே அதிர செய்துள்ளது. விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தையும் மகனும் கொடூரமாக போலீசாரால் தாக்கி கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே இது இதில் பல்வேறு முக்கிய தடயங்கள் கிடைக்கப்பட்டு வரும் நிலையில் பெண் காவலர் ஒருவர் சாட்சி கூறியுள்ளார். இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தை எழுப்பியும் போலீசாருக்கு தக்க தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறியுள்ளார். இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கும் அவர் சாத்தான்குளம் சம்பவத்தை நினைத்தாலே இருப்பதாக ஈரக்குலை நடுங்குகிறது என கூறியுள்ளார்.






