--- --:--:-- --

திருமணம் செய்து வைக்காததால் தந்தையை அடித்துக் கொலை செய்த மகன்..!

13

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே திருமணம் செய்து வைக்கவில்லை எனக்கூறி தந்தையை மண்வெட்டியால் அடித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளான் மகன். கொங்குநாட்டார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சக்கரவர்த்தி அஞ்சலை தம்பதிக்கு 3  மகன்கள்.

 

ஒரு மகனுக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் வறுமை காரணமாக கடைசி இரண்டு மகன்களான அய்யப்பன் கலியமூர்த்தி ஆகியோருக்கு திருமணம் செய்து வைக்கவில்லை/ கலியமூர்த்தி தனது தினக்கூலி பணத்தில் தினமும் மது அருந்திவிட்டு திருமணம் செய்து வைக்கக்கோரி பெற்றோருடன் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு 35 வயதாகும் தனக்கு திருமணம் செய்து வைக்கவில்லை என கலியமூர்த்தி தகராறு செய்துள்ளார்.

 

குடும்ப சூழலை கருதாமல் குடித்துவிட்டு பொறுப்பில்லாமல் இருக்கும் உனக்கு எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என சக்கரவர்த்தி கேட்டுள்ளார். தகராறு முற்றிய நிலையில் மகன் கலியமூர்த்தி அருகில் கிடந்த மண் வெட்டி எடுத்து தாக்கியதாக கூறப்படும் நிலையில் தலையில் பலத்த காயமடைந்த தந்தை சக்கரம் ஒரு கையில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon