இந்தியா 59 செயலிகளுக்குத் தடை விதித்ததற்கு சீனா கண்டனம் !
தங்களது செயலியை தடை செய்ததன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை இந்தியா மீறிவிட்டதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் ஜிரோம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தியா நியாயமான வணிக சூழலை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் 59 செயலிகளை தடை செய்ததன் மூலம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறுவதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் செயலிக்காக பணியாற்றுபவர்களில் வேலைகளை பாதிப்பதாக கூறிய ஜிரோம் அனைத்து முதலீடுகளையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.






