--- --:--:-- --

குரங்கை தூக்கில் தொங்கவிட்டு கொன்ற கொடூரம்..!

13

தெலுங்கானா மாநிலத்தில் தண்ணீர் குடிக்க வந்து வீட்டின் குடிநீர் தொட்டியில் தவறி விழுந்த குரங்கை வீட்டின் உரிமையாளர் தூக்கில் தொங்கவிட்டு கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கம்மம் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் அவரது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் நீர் அருந்த வந்த குரங்கு ஒன்று தொட்டிக்குள் தவறி விழுந்து தத்தளித்து உள்ளது.

 

இதனை பார்த்த வெங்கடேஸ்வர ராவ் அதனை காப்பாற்றுவதற்கு பதிலாக தூக்கு மாட்டி தொங்க விட்டுள்ளனர். துடித்தபடி தொங்கிய குரங்கை அங்கிருந்த நாய்களும் கடித்து குதறின. தொடர்ந்து அந்த குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது.

 

மேலும் குரங்கின் உடலை நாய்களுக்கு உணவாக அவன் வீசி எறிந்து உள்ளான். குரங்குகள் முன்பு இவ்வாறு ஒரு குரங்கை கொன்றால் மற்ற குரங்குகள் பயந்து வீட்டிற்கு வராது என பக்கத்து வீட்டுக்காரர் கூறியதை கேட்டு இந்த கொடூரத்தை நிகழ்த்திய தாக கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon