14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்!
14 வயது சிறுமியை புதுச்சேரி அழைத்து சென்ற கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர் என்ற புகார் தொடர்பாக அவருக்கு எதிராக தமிழக உளவுத்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.
பிரான்சில் வசிக்கும் தமிழச்சி என்பவர் இது தொடர்பான வீடியோ ஆடியோ உரையாடல்களை முகநூலில் பகிர்ந்து குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சிறுமியை அழைத்துச் சென்ற விவகாரம் எப்படி வெளியில் தெரிந்தது என சம்பந்தப்பட்டவர்கள் பேசிக்கொள்ளும் ஆடியோ வெளியாகியுள்ளது.
இதில் டெல் நிறுவனத்தின் மின் பொறியாளராக இருக்கும் நபர் ஒருவரும் சென்றதாகவும் அவர் இடதுசாரி தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர் என தமிழக உளவுத் துறையில் குறிப்பிட்டுள்ளது. அவருடன் சென்ற இரு பெண்கள் உட்பட 6 பேர் குறித்து உளவுத்துறை போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.







