--- --:--:-- --

ஆன்லைன் வகுப்புகளில் பாதுகாப்பு அம்சம் உள்ளதாக மத்திய அரசு பதில் மனு!

8

ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோ அல்லது இணையதள தொடர்புகள் வராத வகையில் ஏற்கனவே பாதுகாப்பு அம்சங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

 

ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற ஆபாச இணையதளங்களின் தொடர்பு இடம்பெறுவதால் பாதுகாப்பான ஆன்லைன் கல்வியை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என்று சரண்யா என்ற பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் சைபர் சட்ட பிரிவு சார்பில் அதன் விஞ்ஞானி தவால் குப்தா பதில் மனு தாக்கல் செய்தார்.

 

மனுதாரர் கோரிக்கைகளை மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை ஏற்கனவே உருவாக்கி விட்டது என்றும் ஆன்லைன் வகுப்புகளின் போது தேவையற்ற வீடியோ அல்லது இணையதள தொடர்புகள் குறித்து இந்தியன் கணினி அவசர தேவைக்கு அவ்வப்போது எச்சரிக்கை தகவல் வழங்கிக் கொண்டே இருக்கும் எனவும் இந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

இந்த சேவை குழு 2020 ஆம் ஆண்டில் மட்டும் 39 அறிவுரை தகவல்களை அனுப்பியுள்ளதாக பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இவற்றையும் மீறி தேவையற்ற வீடியோக்கள் ஆன்லைன் வகுப்பின் போது வந்தால் அது தொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் மனுதாரர் புகார் செய்ய முழு உரிமை உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon