--- --:--:-- --

ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்து!

13

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆட்டோ மீது லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். விருத்தாசலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான உதயகுமார் நேற்று நள்ளிரவு ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திட்டக்குடி வந்துவிட்டு ஓய்வெடுத்த பிறகு இன்று அதிகாலை மீண்டும் ஊருக்கு சென்றார்.

 

கோழியூர் அருகே வந்த போது சாலையோர மரம் வெட்ட குழி தோண்டப்பட்டு அந்த மண் சாலையில் குவிக்கப்பட்டு இருப்பதைக் கண்டு வலது பக்கம் திருப்பிய போது எதிரில் இருந்த சிமெண்ட் ஏற்றுக்கொண்டு திருச்சி நோக்கி வந்த லாரி மீது மோதி இழுத்து சென்றது. இதில் ஓட்டுனர் உதயகுமாரும் காயமடைந்தார். லாரி இடித்ததில் சில மின் கம்பங்கள் சேதம் அடைந்தன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon