--- --:--:-- --

தனது மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

12

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மனைவி இறந்த துக்கம் தாளாமல் தலைமை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீஞ்சூர் காவல் நிலையத்தில் துரைமுருகன் என்பவர் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.

 

இவரது மனைவி ஜெயா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மன அழுத்தத்திலிருந்து துரைமுருகன் தமது வீட்டில் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சடலத்தை கைப்பற்றிய பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon