--- --:--:-- --

அமெரிக்காவில் நீச்சல் குளத்தில் 3 இந்தியர்களின் சடலங்கள் மீட்பு..!

14

அமெரிக்காவில் 3 இந்தியர்கள் நீச்சல் குளத்தில் பிணமாக மிதந்த நிலையில் போலீசார் சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மிடில்சிக்ஸ் கவுண்டில் என்ற இடத்தில் பாரத் பட்டேல் என்ற 62 வயதான முதியவர் அவரது 33 வயதான மருமகள் நிஷா மற்றும் 8 வயதான பேத்தி ஆகியோர் உயிரற்ற நிலையில் தங்கள் வீட்டிற்கு பின்னால் உள்ள நீச்சல் குளத்தில் மிதப்பதைக் கண்டு அண்டை வீட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டதாகவும் அண்டைவீட்டார் தெரிவித்தனர்.

 

மேலும் நீரில் மூழ்கியது தற்செயலா என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon