--- --:--:-- --

கபசுர குடிநீரை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும்!

4

தமிழகத்தில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கபசுரக் குடிநீர் உள்ளிட்ட மருந்துகளை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்று தமிழக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைத்து வியூகங்களை அமைத்து வீடு வீடாக சென்று பல்வேறு முயற்சிகள் எடுப்பது போன்று தற்போது தமிழக அரசு வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மேலும் ஹோமியோபதி, ஆயுர்வேதம் போன்றவற்றால் பரிந்துரைக்கப்பட்ட கபசுரக் குடிநீர் உள்ளிட்ட ப்ரோபைலை டிக் மருந்துகள் அடங்கிய தொகுப்பை வீடு வீடாக சென்று வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார். நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி இந்த திட்டத்தை முடியாது என தமிழக அரசு கூற இயலாது என ஆயுஷ் திட்டத்தின் மூலம் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

 

எனவே இது போன்ற ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபட்டு கொரொனாவை நிரந்தரமாக ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon