திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்தியனுக்கு கொரொனா..! மருத்துவர்களின் அறிவுரைப்படி வீடு திரும்பியுள்ளனர்..!
ரிஷிவந்தியம் திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனுக்கு கொரொனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வருகிறார். திமுகவை சேர்ந்த வசந்தம் கார்த்திகேயன் ரிஷிவந்தியம் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். தற்போது கொரொனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு தரப்பினருக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார்.
அவருடைய குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஏற்கனவே கொரொனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இதனால் வசந்தம் கார்த்திகேயனுக்கு பெரம்பலூரில் கொரொனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது நலமுடன் இருப்பதாகவும் விரைவில் குணமடைந்து மருத்துவர்களின் அறிவுரைப்படி வீடு திரும்பி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்திற்க்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் அமைச்சருக்கான பரிசோதனை முடிவு நெகட்டிவ் என வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




