--- --:--:-- --

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரொனா பாதிப்பு!

7.1

இந்தியாவில் புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 516 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டின் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 14,516 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 375 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மொத்த உயிரிழப்பு 12,948 ஆக அதிகரித்துள்ளது.

 

நாட்டில் கொரொனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 95 ஆயிரத்து 48 ஆக உள்ளது. ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 269 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில், 2 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளனர்.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 ஆயிரத்து 827 க்கும் மேற்பட்டவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டதை அடுத்து பாதிப்பு ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் ஆக உயர்ந்துள்ளது. அங்கு 62 ஆயிரத்து 773 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 893 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு 54 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது. 30 ஆயிரத்து 271 பேர் குணமடைந்துள்ளனர். டெல்லியில் பாதிப்பு 53 ஆயிரத்தை கடந்துள்ளது. குஜராத்தில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon