--- --:--:-- --

தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயார்..! விமானப்படை தலைமை தளபதி பதாரியா பேச்சு!

1

எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பதாரியா அறிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பயிற்சி முடித்த விமானப்படை வீரர்களை பணிக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

அப்போது பயிற்சி முடித்த வீரர்கள், வீராங்கனைகள் மிடுக்கான அணிவகுப்பில் ஈடுபட்டனர். விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் பறந்து சாகசம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை தளபதி பதாரியா கலந்துகொண்டு அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.

 

பின்னர் பேசிய விமானப்படை தலைமை தளபதி பதாரியா கல்வான் பகுதியில் நாட்டுக்காக வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீண் போகாது என்றார். எந்த ஒரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க நமது விமானப்படை தயாராகவே உள்ளதாக குறிப்பிட்டார் பதாரியா.

 

அவர் எப்போதும் எல்லையில் தீவிர கண்காணிப்பில் இருக்க படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon