இறந்த ராணுவ வீரர்களுக்கு மானாமதுரையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய எல்லையில், சீனாவுடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
சமீபத்தில் இந்திய எல்லையில் சீனப் வீரர்களுடன் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வீரர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
பின்னர் 2 நிமிடம் மௌனம் அனுசரித்து அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு இறந்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.







