பிரான்சில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம்!
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கோசிகா தீவில் இடியுடன் கூடிய கன மழை தொடர்ந்து பெய்து வருவதால் அங்குள்ள சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் இழுத்து செல்லப்பட்டன.
சாலைகள் அனைத்தும் வெள்ளம் காரணமாக சேறும் சகதியுமாக காட்சி அளித்த வண்ணம் உள்ளன.






