தேவகவுடா, மல்லிகார்ஜுன கார்கே மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு
முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கர்நாடகாவில் மாநிலங்களவை உறுப்பினர்களாக உள்ள குபேந்திர ரெட்டி, ஹரிபிரசாத், ராஜீவ் கவுடா, பிரபாகரன் ஆகியோரின் பதவி காலம்ஜூன் 25ஆம் தேதி உடன் நிறைவடைகிறது.
காலியாக உள்ள இந்த நான்கு இடங்களுக்கும் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளத்தின் தேசிய தலைவருமான தேவகவுடா காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பாரதிய ஜனதாவை சேர்ந்த அசோக் கஸ்தி, ரான் கடாடி ஆகியோர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.






