பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும்!
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் போக்கை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கும் ஸ்டாலின் மத்திய அரசும், தமிழக அரசும் போட்டிப் போட்டுக்கொண்டு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி கொண்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
தமிழக அரசின் மதிப்பு கூட்டு வரி, உயர்வு மத்திய அரசின் தொடர் விலை ஏற்றம் என்ற இருமுனை தாக்குதலால் சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 5.68 ரூபாயும், டீசல் விலை 4.93 ரூபாயும் அதிகரித்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த விலை ஏற்றம் வாகனங்கள் வைத்திருப்போரையும், ஏழை எளிய நடுத்தர மக்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்று கூறியிருக்கும் ஸ்டாலின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த காலங்களில் அனைத்து பயணங்களையும் அள்ளி எடுத்துக் கொண்ட மத்திய அரசு விலை உயர்வை மட்டும் மக்களின் தலையில் தூக்கி வைப்பது எந்த வகையில் நியாயம் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
விலைவாசி உயர்வுக்கும் பேருந்து கட்டண உயர்வுக்கும் வழிவகுக்கும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தும் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.






