கொரொனா பாதிப்பை பொருத்து சென்னையில் தளர்வு அளிக்கப்படும்!
கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து சென்னையில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். இந்திய தொழில் கூட்டமைப்பான ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொளி மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய அவர் கொரொனாவால் வாழ்க்கை முறையே மாறி இருப்பதாக கூறினார்.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், தொழில் தொடங்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார். இந்தியா வரும் நிறுவனங்களை கவர தமிழகம் முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்ட நிலையில் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.






