கொரொனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக சேவைகள் செய்த சிவகங்கை நகர் வருவாய்த்துறை வட்டாட்சியருக்கு ‘சோழன்’ சேவைச் செம்மல் விருது!
கொரோனா தொற்றுநோய்க் காலப் பகுதியில் சிறப்பாக பல்வகையான சமூக நலச் சேவைகள் செய்த சிவகங்கை நகர் வருவாய்த்துறை வட்டாட்சியருக்கு ‘சோழன்’ சேவைச் செம்மல் விருது.சிவகங்கை நகர் வருவாய் துறையின் வட்டாட்சியராக க. மைலாவதி பணியாற்றி வரும் இவர் மனித நேயம் காப்பதில் மாபெரும் சாதனைகளைச் செய்து வரும் அதேவேளை தனது பணிகளுக்கு அப்பாற்பட்டு செய்து வரும் சமூக சேவைகள் மிகவும் பாராட்டுக்குறியவை.கடமையில் மிகவும் கண்ணியமிக்கவரான இவர் வழக்கமாகவே சமூக நலச் சேவைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர்.
‘கொரோணா’ தொற்று நோய் ஊரடங்கு காலப்பகுதியில் பல இடங்களுக்குச் சென்று ஆலோசனை வழங்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய அதேவேளை, வீதிகளில் வசிப்போருக்கும், மிகவும் வறுமையின் கீழ் வாழ்வோருக்கும் அரசு உதவியுடன் மூன்று வேளையும் சமைத்த உணவு வகைகளை வழங்கி அவர்களின் பசி போக்கி அவர்களின் மனம் மகிழச் செய்தது மட்டுமின்றி அவர்களின் குறை கேட்டறிந்து மேலும் சில அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றியுள்ளார்.
நியாய விலைக் கடைகளில் அத்தாவசியப் பொருட்கள் வாங்க சிரமப்பட்ட பல நூறு குடும்பங்களுக்கு அவற்றை தானே முன்னின்று தன்னார்வத் தொண்டு அமைப்பினர் மூலம் வாங்கி கையளித்தவர்.மேலும், புலம்பெயர்ந்து தொழில் மேற்கொண்டு வந்த தொழிலாளர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்து அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செய்தவர்.

பல இடங்களில் பல நாட்களாக ‘கப சுர நீர்’ வழங்கியமை, முகக் கவசங்கள் வழங்கியமை, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அத்தயாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கியமை, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணித்தமை, இப் பொதுச் சேவைகளுக்கு இடையே தன்துறைக்குட்பட்ட அனைத்து விசயங்களையும் சீராக அதிக உழைப்புடன் நேர்த்தியாக செய்தமை என அனைத்தும் பாராட்டுக்குறியவை.
வட்டாட்சியர் பணியை தன் கடமையாக மட்டும் பாராமல், மனித நேயத்தை நிலை நாட்டக்கூடியதொரு பேராயுதமாக பயன்படுத்தி வரும் இவரின் சமூக நலச் சேவைகளை பாராட்டும் விதமாகவும் ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இந் நற்சான்றிதழ் வழங்கப்படுகின்றது.
விருது பெற்ற வட்டாட்சியரை சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் முனைவர் நிமலன் நீலமேகம், நிறுவனத் தலைவர் பேராசிரியர் டாக்டர். தங்கதுரை, பொதுச் செயலாளர் திருமதி. ஆர்த்திகா நிமலன், நிறுவன முகாமையாளர் திரு. பிரபு, தென்மன்டல பகுதி 2 இன் தலைவர் முனைவர் திரு.சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






