சிங்கத்தை தொட்டு பார்க்க முயன்ற சுற்றுலாப் பயணி! சீறிய சிங்கம்!
ஆபிரிக்க நாடான தான்சானியாவில் தன்னை தொட்டுப்பார்க்க முயன்றவரை சிங்கம் தனது சீறலால் அதிர வைத்தது. சரங்குத்தி தேசிய பூங்காவிற்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் நான்கு சக்கர வாகனத்தில் வனப் பகுதியை சுற்றிப் பார்த்தார்.
அப்போது ஆண் சிங்கம் ஒன்று இருப்பதை அறிந்த வாகன ஓட்டி ஒருவர் தனது வாகனத்தை சிங்கத்தின் அருகாமையில் நிறுத்தினார். அப்போது வாகனத்தில் இருந்த ஒருவர் சிங்கத்தை தொட்டுப்பார்க்க மற்றொருவர் அதனை தனது செல்போனில் பதிவு செய்தார்பின்னர்.
ஒருவர் சிங்கத்தை தொட்டு பார்க்க விரும்பி அருகில் போனபோது அமைதியாக இருந்த சிங்கம் தனது சீற்றத்தை வெளிக்காட்டியது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் உயிர் பயத்தில் உறைந்தனர்.






