கொரொனாவால் உயிரிழந்தவரின் உடலை மனிதாபிமானம் இல்லாமல் குழியில் தள்ளி செல்லும் சுகாதார பணியாளர்கள்!
புதுச்சேரியில் கொரோனாவால் இறந்தவரின் உடலை புதைகுழியில் சுகாதாரப் பணியாளர்கள் அலட்சியமாக வீசி சென்ற நிகழ்வு நெஞ்சை பதற வைத்துள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 40 வயது நபர் புதுச்சேரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பின்னர் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரொனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து அவரது உடல் கோபாலம் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது துளியளவும் மனிதாபிமானம் இல்லாமல் உடலை வீசிச் சென்ற நிகழ்வு காண்போரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இறந்தவருக்கு உறவினர்கள் இருந்தும் இறுதி சடங்குகள் செய்ய யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது.






