--- --:--:-- --

ஆயுஷ்மான் பாரத் திட்ட கட்டணத்தை ஏற்று கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தயாரா?

14

கொரோனா நோய் தொற்று சிகிச்சை எடுக்க மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்ட கட்டணத்தை ஏற்க தனியார் மருத்துவமனைகள் தயாராக உள்ளனவா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருத்துவம் அல்லது நிதி உதவி அளிக்க உத்தரவிடக் கோரி சச்சின் ஜெகன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கட்டணத்தை ஏற்றுக்கொண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க தனியார் மருத்துவமனைகள் தயாராக இருக்கிறதா என நீதிபதிகள் கேட்டனர். இதற்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிப்பதாக தனியார் மருத்துவமனைகள் சங்கம் தெரிவித்ததையடுத்து வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

முன்னதாக கொரொனா நோய் தொற்று சிகிச்சையை இலவசமாக அளிக்க முன்வரும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிலத்தை ஏன் இலவசமாக வழங்க கூடாது என்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon