அரசு அலுவலகத்தில் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் பிறந்தநாள் விழா!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் பிரியாணி விருந்துடன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வேளாண் துறை அலுவலகத்தில் வேளாண்மை விற்பனை குழுவின் உரிமை இடங்களில் ஆய்வாளர் பால்பாண்டி தனது பிறந்தநாளை வேளாண் துறை அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கொண்டாடியுள்ளார்.
அப்போது அங்கிருந்தவர்கள் முக கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் பிரியாணி விருந்தை உற்சாகமாக கொண்டாடி உள்ளனர். இதையடுத்து கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






