--- --:--:-- --

6 மாதங்களுக்கு மின்கட்டண சலுகை வழங்க வேண்டும்!

8

கொரோனா ஊரடங்கால் முந்தைய மாத மின் கட்டணங்களை பேரிடர் நிவாரணமாக அறிவித்து மேலும் 6 மாதங்களுக்கு மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் முந்தைய மாத கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிப்பு வெளியான உடனே அடுத்து வருகிற மாத கணக்கெடுப்பில் இந்த கட்டணம் சரி செய்யப்படும் என உத்தரவாதம் தரப்பட்டதாகவும், தற்போது மின் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் அறிவிக்கப்பட்ட முறையில் மின் கட்டணம் வசூலிக்காமல் வெவ்வேறு விகிதத்தின் அடிப்படையில் மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

 

நான்கு மாத மின் நுகர்வை இரு இரண்டு மாதம் மின் நுகர்வாக பிரிக்காமல் கட்டணம் வசூலிப்பது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்று தெரிந்தும் மின் பகிர்மான கழகம் விந்தையான விளக்கம் அளிப்பதாகவும் அதனை தமிழக அரசு ஆமோதிப்பதாகவும் கூறியுள்ளார். பொதுமக்களை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் உரிய முறையில் யூனிட்டுகளை கழித்து மின் கட்டணம் வசூல் செய்வதை அரசு உறுதி செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்தும் விவசாயிகளிடமிருந்தும் முன் மாத மின்கட்டணத்தை வசூலிக்காமல் முந்தைய மின் கட்டணங்களை பேரிடர் நிவார அறிவிக்க வேண்டும் என்றும் மேலும் 6 மாதங்களுக்கு கால மின் கட்டண சலுகைகளை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசு திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon